பூரு மூணாவை தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி!

Saturday, 18 March 2023 - 17:01

%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%21
அவிசாவளை பிரதேசத்தில் வைத்து மீண்டும் கைது செய்யப்பட்ட பாதாள உலகக் குழுவின் உறுப்பினரான பூரு மூணா என்ற ரவிந்து வர்ண ரங்கவை 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்துவதற்கு காவல்துறையினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்தை தடுப்பதற்கான தற்காலிக ஏற்பாடுகளின் ஏழின் ஒன்றாம் சரத்தின்கீழ் இந்த அனுமதி கிடைக்கபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட அவர் மேலதிக விசாரணைகளுக்காக மேல் மாகாண விசாரணை பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

தம்மீது 9 கொலைக் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும், அதில் அவர் இரண்டை மாத்திரமே செய்துள்ளதாக காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.