யாழில் 6000 குடும்பங்கள் உணவு பஞ்ச நிலைமையை எதிர்நோக்கும் நிலை!

Saturday, 18 March 2023 - 17:52

%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+6000+%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%21
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போதைய நிலையில் போதிய உணவு இல்லாதோர் பட்டியலில் 6500க்குட்பட்ட குடும்பங்கள் மாத்திரமே உணவு பஞ்ச நிலைமையை எதிர்நோக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த குடும்பங்களுக்கு அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களில் விசேட வேலை திட்டத்தின் மூலம் உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் சிவ பாலசுந்தரம் தெரிவித்தார்.

நேற்றைய தினம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் யாழ் மாவட்டத்தில் உணவு அற்ற நிலைமை தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ் மாவட்டத்தில் கட்டுப்பாட்டு விலையில் நெல்விற்பனை செய்ய விரும்புவோர் தமது பிரதேச செயலர் ஊடாக விற்பனை செய்ய முடியும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ஆனால் சிவபாலசுந்தரம் தெரிவித்தார்.

பெரும்போகத்தில் அரசாங்கத்தினால் நெல் கொள்வனவு செய்யப்பட்டு குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவசமாக அரிசியை பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதற்கமைய யாழ்ப்பாண மாவட்டத்தில் பெரும்போகத்தில் நெற்கொள்வனவு செய்யும் அரசாங்கத்தின் கொள்கைத் திட்டத்திற்கமைவாக விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்வனவு செய்து அரிசியாக்கி குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவசமாக வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அதற்கமைவாக யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து 30 மெற்றிக்தொன் சிவப்பு மற்றும் வெள்ளை நாடு நெல் கொள்வனவு செய்யப்படவுள்ளது.

எனவே, நெல்லை விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள் தமது கமக்கார அமைப்பின் ஊடாக தத்தமது பிரதேச செயலகங்களுடன் தொடர்புகொண்டு நெல்லை விற்பனை செய்ய முடியும் என்று தெரிவித்தார்.