இம்ரான் கானை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த முயற்சித்த காவல்துறை!

Saturday, 18 March 2023 - 21:32

%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88++%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%21
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்காக அழைத்து செல்லப்பட்ட போது காவல்துறையினருக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

நீதிமன்றத்திற்கு அருகே இம்ரான் கானின் ஆதரவாளர்கள் கல் வீச்சு தாக்குதலை மேற்கொண்டனர்.

அவர்களை கலைப்பதற்காக கண்ணீர்ப்புகை தாக்குதல்களை மேற்கொண்டதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

பதவியில் இருந்த போது அரசு பரிசுகளை விற்றதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பில் அவர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

லாகூரில் உள்ள அவரது வீட்டில் வைத்து இம்ரான் கான் கைது செய்யப்பட்டார்.

இந்த வார ஆரம்பத்தில் நீதிமன்ற விசாரணையை தவறவிட்டதால் அவரை கைது செய்வதற்கு காவல்துறையினர் முயன்றனர்.

இதன்போது பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இம்ரான் கானின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.