புடினுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டமையை வரவேற்பதாக ஜோ பைடன் தெரிவிப்பு!

Saturday, 18 March 2023 - 22:58

%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%9C%E0%AF%8B+%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%21
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளமையை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வரவேற்றுள்ளார்.

விளாடிமிர் புடின் யுக்ரைனில் போர்க்குற்றம் செய்ததாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் குற்றம் சாட்டியது.

ரஷ்ய தலைவர் அவ்வாறு திட்டமிட்டு செய்ததாக அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார்.

2022இல் ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பின்னர் யுக்ரைனில் இருந்து ரஷ்யாவிற்கு குழந்தைகளை சட்டவிரோதமாக நாடு கடத்துவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ரஷ்யா இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது

அத்துடன் குறித்த பிடியாணை மூர்க்கத்தனமானது என கண்டனம் செய்துள்ளது.

எனினும், ஐக்கிய நாடுகள் சபை இந்த வார ஆரம்பத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

ரஷ்யா, யுக்ரேனிய குழந்தைகளை அதன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு வலுக்கட்டாயமாக வெளியேற்றியது ஒரு போர்க்குற்றமாகும் என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.