விவசாயிகளுக்கு நிவாரண வவுச்சர்கள்!

Sunday, 21 May 2023 - 19:32

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3+%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%21
சிறுபோக நெற் செய்கைக்கான உரத்தை கொள்வனவு செய்வதற்காக விவசாயிகளுக்கு நிவாரண வவுச்சர்களை விநியோகிக்கும் பணிகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

விவசாய அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 6 இலட்சத்து 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இந்தத் திட்டத்தின் ஊடாக நிவாரண வவுச்சர்கள் வழங்கப்படவுள்ளன.

இதற்கமைய, ஒரு ஹெக்டயருக்கு 20 ஆயிரம் ரூபாவும், 2 ஹெக்டயர்களுக்கு 40 ஆயிரம் ரூபாவும் நிவாரணமாக வழங்கப்படும் என விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.