20 பேரை பலியெடுத்த கயானா தீவிபத்துக்கான காரணம் வெளியானது

Wednesday, 24 May 2023 - 9:07

20+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81
தென் அமெரிக்காவின் கயானாவில் பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பான காரணம் வெளியாகியுள்ளது.

குறித்த பாடசாலையின் மாணவி ஒருவரின் கைப்பேசி பறிமுதல் செய்யப்பட்டதால், அவர் உயிரை மாய்த்துக்கொள்ள முற்பட்ட போது, இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீப்பரவலின் போது மாணவிகள் தங்கியிருந்த அறைகள், மூடப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.

தென் அமெரிக்காவின் கயானாவில் பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களில் 19 பேர் பாடசாலை மாணவர்கள் என சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்தினை தொடர்ந்து கயானாவில் மூன்று தினங்களை துக்க தினமாக அனுஷ்டிக்குமாறு அந்த நாட்டு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

அத்துடன், இந்த சம்பவத்தில் மேலும் பலர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் மேலதிக சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரும் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.