ஆசியாவிலேயே முதலிடம் பிடித்தார் விராட் கோலி!

Thursday, 25 May 2023 - 19:53

%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%21
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தினை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 250 மில்லியனை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஆசியாவிலேயே இன்ஸ்டாகிராமில் 250 மில்லியன் பின்தொடர்பவர்களை பெற்ற முதல் நபர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார்.

அத்துடன், கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி ஆகியோருக்கு அடுத்தபடியாக அதிக பின்தொடர்பவர்களை கொண்ட விளையாட்டு வீரர் என்ற இடத்தையும் விராட் கோலி பெற்றுள்ளார்.