மதீஷ பத்திரண - மகீஷ் தீக்ஷனவுக்கு ஆதரவளிப்பது குறித்து ரவிக்குமார் எம்.பி கருத்து!

Thursday, 25 May 2023 - 20:12

%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B7+%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3+-+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%80%E0%AE%B7%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%AA%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%21
சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் விளையாடும், இலங்கை அணியின் வீரர்களான மதீஷ பத்திரண மற்றும் மகீஷ் தீக்ஷன ஆகியோருக்கு, சென்னை ரசிகர்கள் பெரும் ஆதரவளிப்பது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டீ. ரவிக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகம் ஒன்றுக்கு இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், காலம் எல்லாவற்றையும் குணப்படுத்தும் எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ் இனப்படுகொலைக்கு காரணமான ராஜபக்ஷக்கள் தற்போது இலங்கையில் ஆட்சியில் இல்லை.

அரசியலையும், விளையாட்டையும் கலக்கக்கூடாது.

கலை, இலக்கியம் என்பனவும் அரசியலுடன் கலக்கக்கூடாது.

ஆனால், சில சமயங்களில் நாம் மக்களின் உணர்வுகளுடன் பயணிக்க வேண்டும்.

அதன் காரணமாகவே, அப்போது இலங்கை வீரர்களால் சென்னையில் விளையாட முடியாமல் போனது.

தமிழர்களுக்கு எதிராக போர்க்குற்றத்தில் ஈடுபட்ட இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகளாக அவர்கள் கருதப்பட்டனர்.

அவர்களுக்கு எதிரான எங்களின் போராட்டம் தொடரும்.

அதேநேரம், இலங்கையில் தற்போது புதிய அரசாங்கம் ஆட்சியில் உள்ளதுடன், நல்லிணக்கத்துக்கான சூழல் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

சிங்களவர்களும், தமிழர்களும் இணைந்து ராஜபக்ஷக்களை வெளியேற்றுவதற்கான போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த இரண்டு வீரர்களும், ஐ.பி.எல் போட்டிகளின் மூலம் கிடைக்கும் பணத்தைக்கொண்டு, தங்களை நாடி வருபவர்களுக்கு உதவி செய்வார்களேயானால், தாங்கள் அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.