கடமையில் இருந்த கான்ஸ்டபிளை தாக்கிய இரு பெண்கள் கைது!

Thursday, 25 May 2023 - 21:11

%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81%21
போக்குவரத்து கடமையில் இருந்த காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவரின் கடமைக்கு இடையூறு விளைவித்து தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேலியகொடை பகுதியில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கைதான பெண்கள் களனி – பட்டிய பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.

சம்பவத்தில் காயமடைந்த காவல்துறை கான்ஸ்டபிள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.