ஹர்ஷவை நாடாளுமன்ற நிதிக்குழுவின் தலைவராக நியமிப்பதில் பிரச்சினை இல்லை - ஆளும் கட்சி

Thursday, 25 May 2023 - 22:05

%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88+-+%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவை நாடாளுமன்ற நிதிக்குழுவின் தலைவராக நியமிப்பதில் ஆளும் கட்சிக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை என அதன் பிரதான அமைப்பாளரான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அவரின் நடவடிக்கை தொடர்பில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் சில கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

எனவே, இந்த நியமனம் தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் எதிர்க்கட்சிகளுடன் கலந்துரையாடுவதற்கு ஆளும் கட்சி உறுப்பினர்கள் தயாராகி வருவதாக பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.