கைகள் கட்டப்பட்ட நிலையில் வயோதிபர் சடலமாக மீட்பு

Friday, 26 May 2023 - 7:21

%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
கந்தானை - வெலிகம்பிட்டிய பகுதியில் வசித்து வந்த நபர் ஒருவர் நேற்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

84 வயதுடைய ஜா-எல பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இரு கைகளும் கட்டப்பட்ட நிலையில் முகம் மற்றும் கழுத்து பகுதி துணியொன்றினால் சுற்றப்பட்ட நிலையில் சடலம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபரின் புதல்வி வழங்கிய தகவலுக்கு அமையவே சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.