அம்பலாங்கொடையில் இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் - ஒருவர் படுகாயம்!

Friday, 26 May 2023 - 10:07

%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+-+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%21
அம்பலாங்கொடை – ரந்தோம்பே பிரதேசத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த தர்மாசோக கல்லூரியின் பிரதி அதிபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உந்துருளியில் இன்று காலை, பாடசாலை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதேவேளை, அம்பலாங்கொடை – ஆதாதொல விகாரை வீதியில், நேற்றிரவு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

தமது மகளுடன் உந்துருளியில் திருமண நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக சென்ற ஒருவரை இலக்கு வைத்தே இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

எனினும், இந்த துப்பாக்கிச்சூட்டால் எவருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.