தேங்காய் திருடியவருக்கு ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனை

Friday, 26 May 2023 - 8:42

%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88
கம்பஹா - திவுலபிட்டிய தென்னந் தோட்டமொன்றிற்குள் அத்துமீறி நுழைந்து 20 தேங்காய்களை திருடியதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஒருவருக்கு மினுவாங்கொடை நீதவான் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையை விதித்தார்.

குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதவான் தீர்ப்பளித்ததுடன், அதனை 10 வருட காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட தண்டனையாகவும் விதித்தார்.

அத்துடன் அடுத்த 10 வருடங்களை நன்னடத்தையுடன் கழிக்குமாறு குற்றம் சாட்டப்பட்டவருக்கு நீதவான் அறிவுறுத்தினார்.

கெஹெல்-எல்ல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.