ஜனாதிபதி ரணில், வியாட்நாம் பிரதி பிரதமருடன் சந்திப்பு!

Friday, 26 May 2023 - 10:24

%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%2C+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%21
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது ஜப்பான் விஜயத்தின் போது, வியாட்நாமின் பிரதி பிரதமர் ட்ரான் லூ க்வென்க்கை சந்தித்துள்ளார்.

இதன்போது, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், கலாசார உறவுகளை மேம்படுத்துவது குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று ஜப்பானின் டிஜிட்டல் அமைச்சர் டாரோ கொனோவையும் சந்தித்துள்ளார்.

இலங்கையின் அரச அலுவலகங்களை டிஜிட்டல் மயப்படுத்துவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.