சீன முதலீட்டாளர்களை சந்தித்தார் பிரதமர்

Friday, 08 September 2023 - 8:11

%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D
சீனாவின் ஃப்யூஜின் மாகாண நீர்வாழ் உயிரினங்களின் மொத்த விற்பனை தொழில் சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட சீன முதலீட்டாளர்கள் பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். 
 
இலங்கையில் முன்னேற்றமடைந்து வரும் மீன்பிடித் துறையில் சாத்தியமான முதலீடுகள் குறித்து ஆராய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
 
உயர்தர மீன்களை பதப்படுத்துவதற்கும் ஏற்றுமதி செய்வதற்கும் ஏற்ற வகையில் துறைமுகம் ஒன்றுக்கு அருகில் அதிநவீன பதப்படுத்தும் வசதியை கொண்ட அமைப்பு ஒன்றை நிறுவுவதற்கும் குறித்த சீன தரப்பினர் ஆர்வம் காட்டியுள்ளனர்.