பிரேசிலில் இடம்பெற்ற விமான விபத்தில் 14 பேர் பலி!

Sunday, 17 September 2023 - 8:22

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+14+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%21
பிரேசிலின் அமேசான் மாநிலத்தில் இடம்பெற்ற விமான விபத்தில் 14 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து, மாநில தலைநகரான மனாஸிலிருந்து 400 கிலோமீற்றர் தொலைவில் உள்ள பார்சிலோஸ் மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் பலியானவர்களில் 12 பயணிகளும், விமானி ஒருவரும், துணை விமானி ஒருவரும் அடங்குவதாக அமேசான் மாநிலத்தின் ஆளுநர் வில்சன் லிமா குறிப்பிட்டுள்ளார்.

மனாஸ் ஏரோடெக்ஸி ஏர்லைன்ஸ் இந்த விபத்து இடம்பெற்றதை உறுதிப்படுத்தி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர்களில் அமெரிக்க பிரஜைகளும் உள்ளடங்குவதாக பிரேசிலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெறுவதாக பிரேசில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.