மிகக் குறைந்த ஓட்டங்களில் ஆசியக் கிண்ணத்தை கைப்பற்றிய இந்தியா!

Sunday, 17 September 2023 - 18:24

%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%21+
ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியின் இறுதி ஆட்டம் நிறைவடைந்த நிலையில், இந்திய அணி 10 விக்கட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. 
 
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இறுதிப் போட்டி இன்று (17) கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
 
போட்டி ஆரம்பம் முதல் இந்திய பந்துவீச்சாளர்களில் ஆதிக்கத்தால் இலங்கை அணியினர் தடுமாற்றத்துடன் விளையாடினர். 
 
இலங்கை இன்னிங்ஸை ஆரம்பித்து வைக்க, பத்தும் நிஸ்ஸங்கவும், குசல் பெரேராவும் களம் இறங்கினர் ஆனால் முதல் ஓவரின் மூன்றாவது பந்தில், ஜஸ்பிரிட் பும்ராவின் ஒரு பந்தையும் அடிக்காமல் குசல் பெரேரா மைதானத்தை விட்டு வெளியேறினார். 
 
அதன்படி இலங்கை அணி 0.3 ஓவர்கள் நிறைவில் ஒரு ஓட்டத்திற்கு ஒரு விக்கெட்டை இழந்துள்ளது. 
 
அதனையடுத்து, புதிதாக களம் இறங்கிய பத்தும் நிஸ்ஸங்க, சதீர சமரவிக்ரம, சரித் அசங்க, தனஞ்சய டி சில்வா, அணித்தலைவர் தசுன் ஷனக ஆகிய இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் நால்வரும், மொஹமட் சிராஜ்ஜின் 5வது ஓவர் பந்து வீச்சில் களத்திலிருந்து வெளியேறினர். இந்திய அணி வீரர் பும்ராவின் பந்து வீச்சில் இலங்கை அணி அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குசல் பெரேரா இரண்டு பந்துகளுக்கு ஓட்டங்கள் எதுவும் பெறாமல் ஆட்டமிழந்தார். 
 
இரண்டு ஓவர்களில் நிறைவில் இலங்கை அணி எட்டு ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்தது. இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பத்தும் நிஸ்ஸங்க, நான்கு பந்துகளில் இரண்டு ஓட்டங்களை மாத்திரம் பெற்று சிராஜின் பந்துவீச்சில் ஜடேஜாவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். 
 
இலங்கை அணியின் நான்காவது வீரராக களமிறங்கிய சதீர சமரவிக்ரம இரண்டு பந்துகளில் சிராஜின் பந்துவீச்சில் ஓட்டங்கள் எதுவும் பெறாமல் ஆட்டமிழந்தார். மொஹமட் சிராஜ் வீசிய நான்காவது ஓவரில் மட்டும் இலங்கை அணி நான்கு விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 
 
அதற்கமைய பத்தும் நிஸ்ஸங்க, இரண்டு ஓட்டங்களுடனும் தனஞ்சய டீ சில்வா நான்கு ஓட்டங்களுடனும் சதீர சமரவிக்ரம மற்றும் சரித்த அசலங்க ஓட்டங்கள் எதுவும் பெறாமல் ஆட்டமிழந்தனர். 
 
அதற்கமைய இலங்கை அணி 5.5 ஓவர்களில் நிறைவில் ஐந்து விக்கெட்டுகள் இழப்பிற்கு 12 ஓட்டங்களை பெற்றது. 
 
இதையடுத்து ஓட்டங்கள் எதுவும் பெறாமல் இலங்கை அணி தலைவர் தசுன் ஷானக்க இந்திய அணியின் வலது கை வேகப்பந்து வீச்சாளர் சிராஜின் பந்தில் ஆட்டமிழந்தார். 17 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் குசஸ் மென்டிஸ், மொஹமட் சிராஜ் வீசிய பந்து வீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழந்துள்ளார். 
 
ஹர்த்திக் பாண்டியா வீசிய பந்து வீச்சில் துனித் வெல்லாலகே ஆட்டமிழந்துள்ளார். இதன்படி, இலங்கை அணி 12.3 ஓவர்களில் 40 ஓட்டங்களுக்கு எட்டு விக்கெட்டுகளை இழந்தது. 
 
இந்திய அணி சார்பில் மொஹமட் சிராஜ் ஆறு விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர். 
 
இதனையடுத்து 51 என்ற மிக இலகுவாக ஓட்ட இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி இரண்டு போட்டியாளர்களை மாத்திரம் கொண்டு போட்டியில் வெற்றிபெற்றது. 
 
இதன்போது, இஸான் கிஷான் ஆட்டமிழக்காமல் 23 ஓட்டங்களையும், ஷப்மன் கில் ஆட்டமிழக்காமல் 27 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். உதிரியாக ஒரு ஓட்டம் மாத்திரம் பெறப்பட்டது. 
 
ஆசியக் கிண்ணத் தொடர் ஒன்றில் இந்திய அணி இறுதி போட்டியில் 6.1 ஓவர்களுக்குள் விக்கெட் இழப்பின்றி கிண்ணத்தை கைப்பற்றியமை இதுவே முதன்முறையாகும்.