பயணப்பொதியில் சடலம் - உறவினர்களால் அடையாளம் காண்பிக்கப்பட்டது

Monday, 18 September 2023 - 12:37

%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81
சீதுவை காவல்துறை பிரிவிற்குட்பட்ட தடுகம் ஓயாவிலிருந்து மீட்கப்பட்ட ஆண் ஒருவரின் சடலம் அவரின் உறவினர்களால் அடையாளம் காண்பிக்கப்பட்டுள்ளது. 
 
நீல நிறத்திலான பயணப்பொதியிலிருந்து காவல்துறையினரால் நேற்றைய தினம் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. 
 
சில தினங்களுக்கு முன்னதாக குறித்த நபர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
 
மாராவில் பகுதியை சேர்ந்தவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 
 
குறித்த நபர் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி பலரிடமும் நிதி மோசடி செய்ததாக காவல் நிலையத்தில் முறைப்பாடுகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் அவர் தனது நிரந்தர முகவரியில் வசிக்காமல் அங்கிருந்து தலைமறைவாக பிரிதொரு பகுதியில் வசித்து வந்த நிலையில் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.