நீண்ட நாட்களின் பின்னர் இந்திய குழாமில் ரவிச்சந்திரன் அஸ்வின்!

Tuesday, 19 September 2023 - 9:10

%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%21
உலகக் கிண்ண தொடருக்கு முன்னதாக இடம்பெறவுள்ள, அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் இரு ஆட்டங்களில் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

அந்த இரு ஆட்டங்களிலும் கே.எல். ராகுல் தலைவராக செயற்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடைசி ஒருநாள் ஆட்டத்தில் உலகக் கிண்ணத்தில் விளையாடும் இந்திய அணியுடன் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினும், வொஷிங்டன் சுந்தரும் இடம்பெற்றுள்ளார்கள்.

சுமார் 20 மாதங்களுக்குப் பிறகு அஸ்வின் இந்திய ஒருநாள் அணியில் இடம்பெற்றுள்ளார்.

கடைசியாக 2022 ஜனவரியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அஸ்வின் பங்கேற்றார்.

தற்போது அவருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர் எதிர்வரும் 22ம் திகதி முதல் 27 திகதி வரையில் நடைபெறவுள்ளது.