திலீபனின் நினைவேந்தலை நடத்த மாளிகாகந்த நீதிமன்றமும் தடை!

Tuesday, 19 September 2023 - 15:43

%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%21
மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றமும், தமது அதிகார எல்லைக்கு உட்பட்ட பகுதியில் திலீபனின் நினைவேந்தலை நடத்த, தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

காவல்துறையினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்துக்கான எமது செய்தியாளர் தெரிவித்தார்.

முன்னதாக, மருதானை, கொள்ளுப்பிட்டி, கொம்பனித்தெரு, கோட்டை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நினைவேந்தலை அனுஷ்டிப்பதற்கு, கிறிஸ்தவ ஒத்துழைப்பு இயக்கத்தை சேர்ந்த அருட்தந்தை சக்திவேல் உள்ளிட்ட தரப்பினருக்கு கொழும்பு கோட்டை நீதிவான் திலின கமகேவினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதன்படி, குறித்த பகுதிகளில் இன்று மதியம் 12 மணி முதல் இரவு 10 மணிவரையான காலப்பகுதியினுள் குறித்த நினைவேந்தலை முன்னெடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.