காக்காமுனை அப்துல் ஹமீது வித்தியாலய மாணவர்கள்- பெற்றோர் ஆர்ப்பாட்டம்!

Tuesday, 19 September 2023 - 17:09

%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B9%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%21
திருகோணமலை - கிண்ணியா கல்வி வயத்துக்கு உட்பட்ட காக்காமுனை அப்துல் ஹமீது வித்தியாலயத்தின் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் இன்று ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

குறித்த பாடசாலைக்கு சொந்தமானதென கருதப்படும் காணியொன்றை, தனிநபர் ஒருவர் உரிமை கோருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

25 வருடங்களாக, பாடசாலையின் மைதானமாக பயன்படுத்திவந்த குறித்த காணிக்கான உரிமையை, தனி நபரொருவர் கோரி வருவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.