அவசரகால மருந்து கொள்வனவு செயற்பாட்டை இடைநிறுத்த உத்தரவிடுமாறு கோரிக்கை!

Tuesday, 19 September 2023 - 18:08

%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2+%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%21
சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்படும் அவசரகால மருந்து கொள்வனவு செயற்பாட்டை இடைநிறுத்த உத்தரவிடுமாறு, மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் அமைப்பு கோரியுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவிடம் சமர்பிப்பதற்கான இந்த கோரிக்கை அடங்கிய கடிதத்தை, மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் அமைப்பின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ உயர்நீதிமன்ற பதிவாளரிடம் இன்று கையளித்துள்ளார்.

சுகாதார அமைச்சு அண்மையில் ஆரம்பித்துள்ள இந்த அவசரகால கொள்முதலில், மருந்துகளின் தரம் குறித்து கடுமையான சிக்கல்கள் எழுந்துள்ளதாகவும், அவற்றின் கொள்வனவின்போது கொள்முதல் நடைமுறைகள் பின்பற்றப்படுவதில்லை எனவும் அந்த அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

இதன் காரணமாக குறித்த செயற்பாடுகளை இடைநிறுத்த உத்தரவு பிறப்பிக்குமாறு மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் அமைப்பு பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.