பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் இடையே மோதல்?

Tuesday, 19 September 2023 - 18:41

%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%3F
2023ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது.

இந்த கிரிக்கெட் தொடரில் தீர்மானமிக்க அரையிறுதி போட்டியில் இலங்கை அணி பாகிஸ்தான் அணியை வென்று இறுதிப் போட்டிக்கு தெரிவானது.

இந்தநிலையில், இந்த அரையிறுதி போட்டியினையடுத்து, பாகிஸ்தான் அணியின் தலைவர் பாபர் அசாம் மற்றும் அணியின் வேகபந்து வீச்சாளர் ஷஹீன் ஷா அப்ரிடி ஆகியோருக்கிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், இந்த தகவல் பொய்யானது எனவும், இவை அனைத்தும் வதந்திகள் எனவும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறும்போது, “அணியின் ஒரே கவனம் கிரிக்கெட்டில் உள்ளது. விமர்சனங்களை பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை .ஒரு போட்டியில் தோல்வியடைவது விமர்சகர்களுக்கு அவர்களின் கருத்துக்களை சொல்ல வாய்ப்பளிக்கிறது. அணியின் கூட்டத்தில் அனைவரும் தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டனர். ஆனால் வார்த்தை மோதல் ஏற்பட்டது என்பதில் எந்த உண்மையும் இல்லை. அனைவரும் ஒன்றாக கூட்டத்தை விட்டு வெளியேறினர். பல வீரர்கள் ஒரே விமானத்தில் பாகிஸ்தானுக்கு திரும்பினர் என குறிப்பிட்டார்.