குவைட்டில் நிர்க்கத்தியாகியிருந்த 31 இலங்கையர்கள் மிளவும் நாட்டுக்கு!

Tuesday, 19 September 2023 - 20:54

%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+31+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%21
நாடு திரும்ப முடியாத நிலையில் நீண்டகாலமாக குவைட்டில் நிர்க்கத்தியாகியிருந்த 31 இலங்கையர்கள் இன்று நாட்டை வந்தடைந்தனர்.

தற்காலிக விமான அனுமதி பத்திரத்தின் கீழ் அவர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக விமான நிலையத்துக்கான எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதன்படி இன்று காலை 06.16 அளவில் ஸ்ரீலங்கன் விமானசேவை நிறுவனத்தின் விமானம் ஊடாக அவர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

அவர்களில் 3 ஆண்களும் 28 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கடந்த 12ஆம் திகதி குவைட்டிலிருந்து 33 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.

இதன்படி குறித்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் 64 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.