இந்தியா வென்றால்...: பிரபல நடிகையின் அதிரடி பதிவு!

Friday, 17 November 2023 - 18:58

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D...%3A+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%21
2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் தற்போது இந்தியாவில் இடம்பெற்று வருகின்றது.

இந்த தொடரின் அரையிறுதி போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இறுதிப் போட்டி எதிர்வரும் 19ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இதில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதவுள்ளன.

இந்தநிலையில், பிரபல தெலுங்கு நடிகை ரேகா போஜ் திடீரென அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் தனது 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில், 'உலகக் கிண்ணத்தை இந்தியா வென்றுவிட்டால் விசாகப்பட்டினம் கடற்கரையில் நான் நிர்வாணமாக ஓடுகிறேன்' என தெரிவித்துள்ளார்.

இந்த கருத்தை பார்த்த ரசிகர்கள் பலர் சுயவிளம்பரத்திற்காக இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்று விமர்சித்துள்ளனர்.

ஆனால் ரேகா போஜ் இதை மறுத்து, 'இந்திய கிரிக்கெட் அணி மீதான அன்பால் இதனை செய்கிறேன்' என்று பதில் அளித்துள்ளார்.