போராட்டம் வெடிக்குமென அச்சம்: பாதுகாப்பை பலப்படுத்திய காவல்துறை

Monday, 20 November 2023 - 17:15

%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9+%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%3A+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை காவல்நிலையத்தை அண்மித்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியொருவர் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தமை தொடர்பில் அவரது உறவினர்களால் காவல்துறையினர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து, வட்டுக்கோட்டை காவல்நிலையத்தை அண்மித்த பகுதிகளில் போராட்டம் முன்னெடுக்கப்படுவதற்கான சாத்தியம் நிலவுவதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இரும்பு பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டு, அங்கு விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.