உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சிறந்த வீரர்கள் குழாமை அறிவித்தது ஐசிசி

Monday, 20 November 2023 - 21:44

%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%90%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF+
நிறைவடைந்த ஆடவருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் சிறப்பாக செயற்பட்ட வீரர்கள் அடங்கிய 12 பேர் கொண்ட குழாமை, சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று அறிவித்துள்ளது.

இந்திய அணித் தலைவர் ரோஹித் சர்மாவின் தலைமையிலான 12 பேர் அடங்கிய குழாமின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, இந்த குழாமில், ரோஹித் சர்மா, தென்னாபிரிக்க அணியின் குயின்டன் டி கொக், இந்திய அணியின் விராட்கோலி, நியூஸிலாந்து அணியின் டெரல் மிச்செல், இந்திய அணியின் கே.எல் ராகுல், அவுஸ்திரேலிய அணியின் கிளேன் மெக்ஸ்வெல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அத்துடன், இந்திய அணியின் ரவிந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா, இலங்கை அணியின் தில்ஷான் மதுஸங்க, அவுஸ்திரேலிய அணியின் எடம் ஷம்பா, இந்திய அணியின் மொஹம்மட் ஷமி ஆகியோரின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த குழாமில் மேலதிக வீரராக தென்னாபிரிக்க அணியின் ஜெரால்ட் கோட்ஸியின் பெயரும் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.