பசுபிக் வேர்ல்ட் சொகுசு கப்பல் நாட்டுக்கு

Monday, 20 November 2023 - 21:49

%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81+%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81
பசுபிக் வேர்ல்ட் என்ற சொகுசு பயணிகள் கப்பல் இன்று அதிகாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

இந்த கப்பல் 1,691 பயணிகள் மற்றும் 704 பணியாளர்களுடன் எகிப்திலிருந்து வந்துள்ளது.

குறித்த கப்பலில் ஜப்பானிய மற்றும் சீன சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் கொழும்பு, காலி மற்றும் கண்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணிக்கவுள்ளனர்.

குறித்த கப்பல் இன்று இரவு மலேசியா நோக்கி பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது