வற் வரி தொடர்பான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் அடுத்த மாதம்

Monday, 20 November 2023 - 22:10

%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
வற் எனப்படும் பெறுமதி சேர் வரி மற்றும் நிதிச் சட்டமூலங்கள் தொடர்பான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் அடுத்த மாதம் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.

இன்று கூடிய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

அதற்கமைய, அன்றைய தினம் முற்பகல் 9.30 முதல் மாலை 4.30 மணிவரையில் குறித்த விவாதம் நடைபெறவுள்ளது.

அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் வற் வரியினை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தற்போது நடைமுறையில் உள்ள 15 சதவீத வற் வரியானது 18 சதவீதமாக அதிகரிக்கப்படவுள்ளது.

அத்துடன் மேலும் 200 பொருட்களை வற் வரியினை அறவிடுவதற்கான பட்டியலில் இணைப்பதற்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.