சுற்றுலா திட்டங்கள் குறித்து ஹரின் பெர்னாண்டோ ஆலோசனை

Saturday, 27 January 2024 - 21:19

%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B+%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88
முப்படை மற்றும் காவல்துறை பிரதானிகளுடன் சுற்றுலா திட்டங்கள் குறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ஆலோசனை நடத்தியுள்ளார்.

சுற்றுலா வர்த்தகத்தில் பல புதிய அனுபவங்களைச் சேர்ப்பதில் முப்படைகள் மற்றும் காவல்துறை தமது பங்களிப்பை வழங்குவதாக இதன்போது உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக காவல்துறையும், நாட்டுக்குள் உள்நாட்டு விமான சேவைகளை அதிகரிப்பது குறித்து விமானப்படையும் இணக்கம் வெளியிட்டுள்ளன.

அத்துடன், கடற்படையின் பங்கேற்புடன் கடல் சுற்றுலாவை மேம்படுத்துதல் மற்றும் இராணுவத்தின் பங்கேற்புடன் உயிர்காக்கும் திட்டத்தை ஆரம்பித்தல் ஆகிய திட்டங்களில் தமது பங்களிப்பை வழங்குவதாக குறித்த தரப்பினர் தெரிவித்துள்ளனர்.