காந்தாரா இரண்டாம் பாகம் குறித்து வெளியான தகவல்

Tuesday, 30 January 2024 - 18:36

%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D
கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் காந்தாரா.

இப்படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் 'காந்தாரா' டப்பிங் செய்து வெளியிடப்பட்டது.

இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி கதாநாயகனாக நடித்து இருந்தார்.

இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தயாரிப்பாளர் அறிவித்திருந்தார்.

இதற்கான முதல்பார்வையும் அண்மையில் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், காந்தாரா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் 1970 - 80 காலகட்டத்தில் நடைபெறுவது போன்று அமைந்துள்ளதால் இதற்கான பிரமாண்ட செட் அமைக்கும் பணி மங்களூரில் எதிர்வரும் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளதாகவும் படப்பிடிப்பு மே மாதம் தொடங்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.