விஜய்யின் புதிய அரசியல் கட்சி?

Tuesday, 30 January 2024 - 20:58

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%3F
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய்.

விஜய் சினிமாவில் மட்டுமல்ல பொதுச் சேவைகள் செய்வதிலும் தற்போது கவனம் செலுத்தி வருகின்றார்.

அண்மையில் இடம்பெற்ற ஆலோசனை கூட்டத்தில் விஜய் அரசியல் குறித்து பேசியிருந்தார்.

அத்துடன், தேர்தலை சந்திக்க எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என விஜய் குறிப்பிட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

விரைவில் விஜய் மக்கள் இயக்கத்தை ஒரு அரசியல் கட்சியாக மாற்றம் செய்து நடிகர் விஜய்யை தலைவராக அறிவிக்கவும் முடிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்ய, பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையிலான நிர்வாகிகள் எதிர்வரும் 04ஆம் திகதி டெல்லி செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

தற்போது, புதிதாக விஜய்யின் அரசியல் நகர்வு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, விஜய் அரசியலுக்கு வந்தால் கட்சி பெயர் என்ன வைப்பார் என கிசுகிசுக்கப்பட்டு வந்தநிலையில், தமிழக முன்னேற்ற கழகம் என விஜய் கட்சிக்கு பெயர் வைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.