நடிகர் சூர்யாவின் புதிய புகைப்படம்: சமூக வலைத்தளங்களில் வைரல்

Thursday, 01 February 2024 - 16:23

%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%3A+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D
இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் 'கங்குவா'.

ஸ்டுடியோ கிரீன் மற்றும் யு.வி. கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் பொலிவூட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த்ராஜ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

3D முறையில் சரித்திர படமாக உருவாகும் கங்குவா, 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது.

இந்தநிலையில், 'கங்குவா' திரைப்படத்தில் நடிகர் சூர்யாவின் புதிய தோற்றத்தின் புகைப்படத்தை தயாரிப்பு நிறுவனம் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளது.

சூர்யாவின் இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.


No description available.