6 மணிநேரம் காத்திருந்த ரசிகர்களை பேருந்து மீது ஏறி பார்த்த நடிகர் விஜய்

Monday, 05 February 2024 - 19:42

6+%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%8F%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய்.

விஜய் அண்மையில் அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்திருந்தார்.

விஜய் இனிவரும் நாட்களில் முழுநேரம் அரசியலில் ஈடுபட உள்ளதால், சினிமாவில் இருந்து சிறிது காலம் விலகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

எனினும், தற்போது விஜய் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள விஜய்யின் 68ஆவது திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

இந்தநிலையில், குறித்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்றைய தினம் சென்னையின் - கடலூர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, விஜய்யை காண்பதற்கு அதிகமான ரசிகர்கள் அங்கு குவிந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ரசிகர்கள் சுமார் 6 மணிநேரம் வரை விஜய்யை காண்பதற்கு காத்திருந்ததாகவும், இதனையடுத்து நடிகர் விஜய் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்றின் மீது ஏறி ரசிகர்களை பார்த்து கை அசைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.