தென்னாபிரிக்காவின் இந்த ஆண்டுக்கான பொதுத் தேர்தல் திகதியை இம்மாத இறுதியில் அந்த நாட்டு ஜனாதிபதி சிறில் ரமபோஷா அறிவிப்பார் என ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் 15 நாட்களுக்குள் தேர்தல் தொடர்பான அறிவிப்பை அவர் வெளியிடுவார் என தென்னாபிரிக்க ஜனாதிபதியின் செய்தி தொடர்பாளரை மேற்கோள்காட்டி ரொய்டர்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
வரலாறு காணாத மின்வெட்டு, பின்னடைவான சேவை வழங்கல் மற்றும் அதிக அளவிலான வேலையின்மை போன்ற பல்வேறு விடயங்களில் தென்னாபிரிக்க மக்கள் பாதிப்புக்குள்ளாகியிருந்தனர்.
இந்தநிலையில், அது சிறில் ரமபோசா தலைமையிலான ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியை பாதிக்கக்கூடும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
1994ல் நிற அடிப்படையிலான சர்ச்சை முடிவுக்கு வந்த பின்னர் முதல் முறையாக ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி அதன் நாடாளுமன்ற பெரும்பான்மையை இழக்கும் என நிபுணர்கள் எதிர்வுகூறியுள்ளனர்.