அவுஸ்திரேலிய அணி 11 ஓட்டங்களால் வெற்றி

Friday, 09 February 2024 - 19:30

%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+11+%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+
சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையே இடம்பெற்ற முதலாவது இருபதுக்கு20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி 11 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

முன்னதாக நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

அதற்கமைய அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 213 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 202 ஓட்டங்களை மட்டுமே பெற்று 11 ஓட்டங்களால் தோற்விலை தழுவியது.