வணிக வங்கிகளுக்கான கட்டுப்பாடு தளர்வு

Friday, 09 February 2024 - 21:06

%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81
வணிக வங்கிகளுக்கு குறுகிய கால கடன்களை வழங்குவதற்கு அமுல்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை இலங்கை மத்திய வங்கி மேலும் தளர்த்தியுள்ளது.

நாணய சபை கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

பெப்ரவரி 16ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால், கடந்த வருடம் ஜனவரி 16 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில், வணிக வங்கிகளுக்கு குறுகிய கால கடன்களை வழங்குவதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.