தாமதமாக வெளிவரும் பாகிஸ்தான் பொதுத்தேர்தல் முடிவுகள்

Friday, 09 February 2024 - 22:28

%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
பாகிஸ்தானில் இடம்பெற்ற பொதுத்தேர்தல் வாக்குபதிவு முடிவுகள் சுமார் 10 மணி நேர தாமதத்திற்கு பின்னர் வெளிவரத் தொடங்கியுள்ளன.

அரசாங்கத்தால் தொலைபேசி மற்றும் இணைய சேவைகள் நிறுத்தப்பட்டதன் காரணமாகவே இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகாரபூர்வமற்ற முடிவுகள் உள்ளூர் தொலைக்காட்சியின் ஊடாக அறிவிக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தற்போது சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இம்ரான் கானின் பீ.டி.ஐ. கட்சி 100 ஆசனங்களுக்கும் அதிகமான நிலையில் முன்னணியில் உள்ளதாக தெரிவித்துள்ளது.

இம்ரான் கானின் கட்சியின் ஒத்துழைப்புடன் சுயேட்சை வேட்பாளர்கள் குறைந்தது 49 பேர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீஃவ், லாகூர் தொகுதியில் வெற்றிபெற்றுள்ளார்.

அவரது புதல்வியும் லாகூர் தொகுதியில் வெற்றிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, கடந்த 2007ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் பெனாரிஸ் பூட்டோவின் புதல்வரும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், முழு அளவிலான தேர்தல் முடிவுகள் குறித்த விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.