லக்னோ அணியில் ஷமர் ஜோசப்

Saturday, 10 February 2024 - 21:37

%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B7%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D
இந்த வருடம் நடைபெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் மார்க் வூட்டுக்கு பதிலாக மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷமர் ஜோசப் நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த அணியினால் 3 கோடி இந்திய ரூபாவுக்கு அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

22 வயதான ஷமர் ஜோசப் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் 13 விக்கெட்டுக்களை வீழ்த்தி அனைவரினதும் கவனத்தையும் ஈர்த்திருந்தார்.

ஷமர் ஜோசப் தமது வாழ்நாளில் இரண்டு இருபதுக்கு 20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வூட் அந்த அணியில் இடம்பெறாமைக்கான காரணம் வெளியாகவில்லை.