இம்ரான் கான் 12 வழக்குகளிலிருந்து பிணையில் விடுவிப்பு

Saturday, 10 February 2024 - 21:55

%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+12+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை, இராணுவ தளங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பான 12 வழக்குகளிலிருந்து பிணையில் விடுவிப்பதற்கு அந்தநாட்டின் பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை, இராணுவ அருங்காட்சியகம் மற்றும் தலைமையகம் மீதான தாக்குதல் உட்பட 12 வழக்குகளில் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிப்பதற்கு பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றத்தின் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், அரசுக்கு கிடைத்த பரிசுகளை விற்பனை செய்தமை, அரச இரகசியங்களை கசியவிட்டமை மற்றும் திருமண சட்டத்தை மீறியமை உள்ளிட்ட வழக்குகளில் இம்ரான் கானுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளமையினால் அவர் தொடர்ந்தும் சிறையிலேயே இருப்பாரெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.