வாகன கதவில் மோதி இன்னொரு வாகனத்தில் சிக்கி இளம் குடும்பஸ்தர் பலி!

Sunday, 11 February 2024 - 19:16

%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9+%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%21
மட்டக்களப்பு – கொழும்பு பிரதான நெடுஞ்சாலை ஏறாவூர் ஆறுமுகத்தான் குடியிருப்பில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பலியானதாக ஏறாவூர் காவல்துறையினர் தெரிவித்தனர்.

வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஏறாவூர் 4ஆம் குறிச்சியைச் சேர்ந்த சண்முகராசா சுதர்ஷன் (37) என்பவரே பலியானார்.

நகைக் கடை கூலித் தொழிலாளியான சுதர்ஷன் 4 வயதைக் கொண்ட ஒரு குழந்தைக்கும், 6 மாத கைக்குழந்தைக்கும் தந்தை என உறவினர்கள் தெரிவித்தனர்.

சம்பவதினத்தன்று சுதர்ஷன், உந்துருளியில் பிரதான வீதியால் சென்று கொண்டிருந்த போது வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிய ரக பாரவூர்தியை கடக்கும்போது அந்த வாகனத்தின் சாரதி திடீரென வாகனத்தின் கதவைத் திறந்துள்ளார்.

வாகனக் கதவில் பலமாக மோதியதால் வீதியில் நிலை தடுமாறி விழுந்த அவரை பின்னால் வந்த மற்றொரு வாகனம் மோதி உடலின் மீது ஏறிச் சென்றுள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த அவர் உதவிக்கு விரைந்தோரினால் உடனடியாக எறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படடார்.

எனினும், சிகிச்சை பயனின்றி அவர் இன்று உயிரிழந்து விட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு சட்ட வைத்திய அதிகாரியின் உடற் கூராய்வுப் பரி சோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இன்று அடக்கம் செய்யப்பட்டது.

இச்சம்பவம் சம்பந்தமாக சிறிய பாரவூர்திகளின் சாரதிகள் இருவரையும் கைது செய்துள்ள காவல்துறையினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.