நாட்டில் இன்று முதல் UPI கட்டண முறை!

Monday, 12 February 2024 - 7:50

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+UPI+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%21
இந்தியாவின் UPI என்ற ஒருங்கிணைந்த கட்டணம் செலுத்தும் முறைமை இன்று முதல் இலங்கை மற்றும் மொரிஷியசில் ஆகிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மற்றும் மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் ஆகியோர் இணையவழி முறையின் ஊடாக இதனை அறிமுகப்படுத்தவுள்ளனர்.

UPI என்ற ஒருங்கிணைந்த கட்டணம் செலுத்தும் முறைமை 2016 ஆம் ஆண்டில் இந்திய தேசிய கொடுப்பனவு கூட்டுத்தாபனத்தினால் உடனடி பணம் செலுத்தும் முறைமையாக அறிமுகப்படுத்தப்பட்டது.

இது பல வங்கிக் கணக்குகளை, ஒரே கைபேசி செயலி, ஊடாக இணைக்கும் அமைப்பாகும்.

இந்த கட்டண முறையானது கைபேசிகள் மூலம் வங்கிகளுக்கு இடையேயான மற்றும் தனிப்பட்ட வர்த்தக பரிவர்த்தனைகளை எளிதாக்குகிறது.

இதன்மூலம் இலங்கையின் சுற்றுலா வர்த்தகம் மேம்படும் எனவும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி, தெரிவித்துள்ளார்.