19 வயதிற்குட்பட்ட உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் இந்திய அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலிய அணி 79 ஓட்டங்களால் வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.
நேற்று இடம்பெற்ற இறுதிப்போட்டியில் நாணய சுழற்ச்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய இளையோர் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 253 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இந்தநிலையில் 254 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய இளையோர் அணி 43.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 174 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.