வாகன விபத்தில் ஐவர் படுகாயம் - சிலரின் நிலை கவலைக்கிடம்!

Monday, 12 February 2024 - 9:47

%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%90%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%21
இரத்தினபுரி நவநகர பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.

குருவிட்ட பிரதேசத்தில் இருந்து இரத்தினபுரி நோக்கி பயணித்த மகிழுந்து வேக கட்டுப்பாட்டை இழந்து மூன்று உந்துருளிகளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தில் படுகாயமடைந்தவர்கள் இரத்தினபுரி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் படுகாயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை இரத்தினபுரி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.