விசேட சோதனை நடவடிக்கை - 625 பேர் கைது!

Monday, 12 February 2024 - 11:22

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+-+625+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81%21
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் விசேட சோதனை நடவடிக்கைகளில் இன்று அதிகாலை 12.30 உடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 625 சந்தேகநகபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதன்போது, போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 545 சந்தேகநபர்களும், குற்றப் பிரிவுகளுக்கு அனுப்பப்பட்டுள்ள பட்டியலில் உள்ள 80 சந்தேகநபர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கைதானவர்களில் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் மற்றும் காவல்துறை விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் உள்ளடங்கியிருந்த 7 சந்தேகநபர்களும் அடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.