மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த 8 இந்திய கடற்படை அதிகாரிகள் விடுதலை!

Monday, 12 February 2024 - 13:45

%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3+%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+8+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%21
கட்டார் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த எட்டு முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஏழு பேர் நாடு திரும்பியுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு இன்றைய தினம் தெரிவித்துள்ளது.

கத்தாரில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிந்ததாக கூறப்படும் குறித்த சந்தேகநபர்கள் மீதான குற்றச்சாட்டுகளை கட்டாரோ அல்லது இந்தியாவோ வெளியிடவில்லை.

எனினும், இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

2022 ஆம் ஆண்டில் கைதான குறித்த 8 முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகளுக்கும் கடந்த அக்டோபரில், கட்டாரில் உள்ள முதன்மை அமர்வு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது.

பின்னர் குறித்த அதிகாரிகள் சார்பில் தண்டனைக்கு எதிராக இந்திய வெளிவிவகார அமைச்சு மேன்முறையீடு செய்திருந்தது.

இந்தநிலையில், கடந்த மாதம் அவர்களது மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தைகளையடுத்து குறித்த 8 முன்னாள் அதிகாரிகளும் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.