சபரகமுவ பல்கலைக்கழகத்தின் 7 மாணவர்கள் கைது!

Monday, 12 February 2024 - 15:20

%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B5+%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+7+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81%21
சபரகமுவ பல்கலைக்கழகத்தின் மூன்று மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அந்த பல்கலைக்கழகத்தின் 7 மாணவர்கள் சமனலவெவ காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மாணவர்கள் இன்றைய தினம் பலாங்கொடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்றுவரும் மூன்று மாணவர்கள் கடந்த 9 ஆம் திகதி இரவு, பல்கலைக்கழக சிற்றுண்டிச்சாலையில் வைத்து தாக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலையடுத்து, தலைமறைவாகியிருந்ததாக கூறப்படும் குறித்த ஏழு மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான இரண்டு மாணவர்களும் மாணவி ஒருவரும் தொடர்ந்தும் பலாங்கொடை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சமனலவெவ காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.