இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் ஜெக் லீச் உபாதை காரணமாக இந்திய சுற்றுப்பயணத்தின் எஞ்சிய டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.
ஹைதராபாத்தில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
குறித்த போட்டியில் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்தபோது, போது அவரது இடது முழங்காலில் உபாதை ஏற்பட்டது.
இதன்காரணமாக விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடவில்லை.
இந்தநிலையில், எதிர்வரும் வியாழக்கிழமை ராஜ்கோட்டில் ஆரம்பமாகவுள்ள இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட கிரிக்கெட் போட்டியில் ஜெக் லீச்சுக்கு மாற்றாக ஒருவரை இங்கிலாந்து அறிவிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.