அக்கரகந்தை ஆற்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு

Monday, 12 February 2024 - 15:53

%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
லிந்துலை - நாகசேனை பகுதியில் அக்கரகந்தை ஆற்றிலிருந்து இன்றைய தினம் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பேருந்து பயணிகளினால் குறித்த சடலம் அவதானிக்கப்பட்டு காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.இந்தநிலையில், லிந்துலை காவல்துறையினரும் பிரதேச மக்களும் இணைந்து சடலத்தை மீட்டுள்ளனர்.

உயிரிழந்த பெண் தொடர்பில் எந்தவித தகவல்களும் தெரியவராத நிலையில் லிந்துலை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.