ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க களமிறங்கினால், அவரால் வெற்றிபெற முடியாது என, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
எமது செய்திச் சேவையுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது இந்த விடயத்தைக் கூறினார்.
இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், “நான் அமைச்சரவையில் இணைந்து கொள்ளப் போவதில்லை.
எனது அரசியல் வாழ்க்கையில் என்றுமே செல்வங்களுக்காகவும் பதவிகளுக்காகவும் எந்த முடிவையும் எடுத்ததில்லை.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து செயற்படுவது என்பது புதிய விடயம் இல்லை. நான் இப்போது மக்களின் பிரதிநிதி, நாட்டின் முன்னேற்றத்தையே விரும்புகிறேன்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தான் நாட்டின் வரிசை யுகத்தை நிறைவு செய்து பல சலுகைகளை மக்களுக்காக வழங்கினார்.
அதில் ஈர்க்கப்பட்டவர்களில் நானும் ஒருவன்.
ஆனால், ராஜபக்ஷக்களுடன் இணைந்து ஜனாதிபதித் தேர்தலில் அவர் போட்டியிடுவாராக இருந்தால் அவர் வெற்றி பெறுவது கடினம்” என ராஜித்த சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
Latest News
நாட்டின் சில பகுதிகளில் நாளை 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சிக்கு வாய்ப்பு
Local
30 July 2026
தேயிலை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்க புதிய திட்டங்கள்
Local
30 July 2026
ஆகஸ்ட் 3 ஆம் திகதி தஞ்சாவூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
Local
30 July 2026
அமெரிக்கா - ஈரான் பதற்றம்: போரை நிறுத்தி பேச்சுவார்த்தைக்குத் திரும்புமாறு ஐ.நா. பொதுச்செயலாளர் அவசர அழைப்பு!
Local
30 July 2026
கடந்த வாரம் முதல் அதிகரித்த தங்க விலையின் இன்றைய நிலவரம்
Local
30 July 2026
விஜய் ரசிகர்களுக்காக களமிறங்கிய மீஷா கோஷல்!
Local
30 July 2026
வானூர்தியில் த்ரிஷா செய்த காரியம் - இணையத்தில் வைரலாகும் நிழற்படம்!
Local
30 July 2026
சுகீஸ்வர பண்டாரவின் பிணை மனு கோரிக்கை நிராகரிப்பு
Local
30 July 2026
அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றார் அஜிங்கிய ரஹானே!
Local
30 July 2026
பெற்றோர்களைப் பதற வைக்கும் செய்தி : 7,000 கல்லூரி மாணவர்களுக்கு எச்.ஐ.வி தொற்று
Local
30 July 2026